/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழி விடுவதில் இரு தரப்பு மோதல் இருவர் காயம்; 10 பேர் மீது வழக்கு
/
வழி விடுவதில் இரு தரப்பு மோதல் இருவர் காயம்; 10 பேர் மீது வழக்கு
வழி விடுவதில் இரு தரப்பு மோதல் இருவர் காயம்; 10 பேர் மீது வழக்கு
வழி விடுவதில் இரு தரப்பு மோதல் இருவர் காயம்; 10 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 20, 2024 10:45 PM
பல்லடம்:பல்லடம்-, மங்கலம் ரோடு, பி.டி.ஓ., காலனி வழியாக பைக்கில் சென்ற இருதரப்பினருக்கு இடையே வழிவிடுவதில் தகறாறு ஏற்பட்டது. இதனால், சமாதானம் பேச இரு தரப்பினரும், ராயர்பாளையம் பகுதியில் கூடியதால் ஏற்பட்ட தகராறில், இருவர் காயமடைந்தனர்.
பல்லடம் அடுத்த கரையாம்புதுார், சக்தி நகரை சேர்ந்த முருகன் மகன் தினேஷ், 23, பி.டி.ஓ., காலனியை சேர்ந்த சந்தோஷ்குமார் மகன் பிரகாஷ், 18, காமராஜர் நகரை சேர்ந்த மெத்தீபா மகன் நவாப் நவ்பீஸ், 18 உட்பட ஐந்து பேர் இரு பைக்கிலும், பல்லடம், பனப்பாளையத்தை சேர்ந்த முத்து மகன் தமிழ்செல்வன், 24 மற்றும் பாபு மகன் டைமண்ட் 20 ஆகிய இருவரும் ஒரு பைக்கிலும், நேற்று முன்தினம் இரவு மங்கலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழி விடுவதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ராயர்பாளையம் பகுதியில் இரு தரப்பினர் சமாதானம் பேச திரண்டனர். அபன்போது ஏற்பட்ட தகராறில், தமிழ்ச்செல்வன், டைமண்டு ஆகியோருக்கு காயமும் ஏற்பட்டது. இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், இருதரப்பைச் சேர்ந்த, 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
சமீபத்தில் தான், சிவகங்கையை சேர்ந்த ரவுடி வினோத் கண்ணன் என்பவரை, மற்றொரு ரவுடி கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ராயர்பாளையம் அருகே நடந்த இச்சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. இதற்கிடையே, அதே ராயர்பாளையத்தில், மீண்டும் அடிதடி தகராறு ஏற்பட்டு, கொலைவெறி தாக்குதல் நடத்தியது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், எதற்கெடுத்தாலும், கத்தி, அரிவாள் என ஆயுதங்களை கையில் எடுக்கும் கலாசாரம், பல்லடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது