/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10ம் வகுப்பு ஆங்கில தேர்வு :வினாத்தாளில் எழுத்து பிழை?
/
10ம் வகுப்பு ஆங்கில தேர்வு :வினாத்தாளில் எழுத்து பிழை?
10ம் வகுப்பு ஆங்கில தேர்வு :வினாத்தாளில் எழுத்து பிழை?
10ம் வகுப்பு ஆங்கில தேர்வு :வினாத்தாளில் எழுத்து பிழை?
ADDED : மார் 30, 2024 12:10 AM
திருப்பூர்;பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தேர்வு கடந்த, 28ம் தேதி நடந்தது. வினாத்தாளில் பகுதி, 2, ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி பிரிவில், வினா எண், 18 ல், what was frank sorry for? என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. இதற்கு, வெளிப்படையாக மன்னிப்பு கேட்பது எப்படி என்ற அர்த்தம்.
இக்கேள்வியில் எழுத்து பிழை உள்ளது என தெரிவித்துள்ள ஆங்கில ஆசிரியர்கள்,' what was franz sorry for? என வினா வந்து இருக்க வேண்டும்.
அதே நேரம், ஆங்கில ஆசிரியர்களில் மற்றொரு தரப்பினர்,' ஆங்கில புத்தகத்திலே இந்த கேள்வி Franz என்பதற்கு பதிலாக Frank என தவறாக பிரின்டாகியுள்ளது. இது குறித்து, மாநில பாடநுால் குழுவிடம் எடுத்துக்கூறி, மாறுதல் செய்யும் படி கல்வியாண்டு துவக்கத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.
பாடம் கற்பிக்கும் போதே FranK வுக்கு பதிலாக, FranZ என மாற்றி படிக்கும்படி கற்பிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் உள்ள வார்த்தை அப்படியே வினாத்தாளில் கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்திருக்க வாய்ப்பில்லை,' என்கின்றனர்.

