/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை வன எல்லை 'கல்லாங்குத்து' காட்டில் வீட்டு மனை இடம் பிடிக்க திரண்ட மக்களால் பரபரப்பு
/
உடுமலை வன எல்லை 'கல்லாங்குத்து' காட்டில் வீட்டு மனை இடம் பிடிக்க திரண்ட மக்களால் பரபரப்பு
உடுமலை வன எல்லை 'கல்லாங்குத்து' காட்டில் வீட்டு மனை இடம் பிடிக்க திரண்ட மக்களால் பரபரப்பு
உடுமலை வன எல்லை 'கல்லாங்குத்து' காட்டில் வீட்டு மனை இடம் பிடிக்க திரண்ட மக்களால் பரபரப்பு
ADDED : பிப் 22, 2025 08:26 AM

உடுமலை; உடுமலை அருகே, திருமூர்த்திமலையடிவாரத்தில், வன எல்லையை ஒட்டியுள்ள கல்லாங்குத்து காட்டில் வீட்டு மனை வழங்க உள்ளதாக பரவிய வதந்தியால், பல கிராம மக்கள் திரண்டு வந்து போட்டி போட்டு, இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையடிவாரத்தில், ஆபத்தான நீரோட்டம் உள்ள காண்டூர் கால்வாய் மற்றும் வன எல்லையை ஒட்டி, வருவாய்த்துறைக்கு சொந்தமாக, 11 ஏக்கர் பரப்பளவில் கல்லாங்குத்து காடு உள்ளது.
மலை, பள்ளம் என கரடுமுரடாக உள்ள பகுதியில், வீட்டு மனை பட்டா வழங்க உள்ளதாக வதந்தி பரவியுள்ளது.
இதனால், நேற்று அதிகாலை முதலே, தளி, திருமூர்த்திநகர், தினைக்குளம், மொடக்குப்பட்டி, எரிசனம்பட்டி, தேவனுார்புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் அப்பகுதியில் திரண்டனர்.
அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து, கரடு, முரடாகவும், முட்புதர்களுடன் கூடிய மலைப்பகுதியில், கற்கள் கொண்டு அடையாளம் வைத்து, தங்களுக்கு என இடம் தேர்வு செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த வனத்துறை
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வன எல்லைக்குள் வந்த மக்களை திருப்பி அனுப்பியதோடு, இப்பகுதி யானைகள் அதிகம் வந்து முகாமிட்டு வருகின்றன. காட்டுப்பன்றி, மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி என எச்சரித்து அனுப்பினர்.
மக்கள் ஏமாற்றப்படும் அவலம்
வருவாய்த்துறை வசம் கல்லாங்குத்து காடு என ஆவணம் உள்ள நிலையில், இதனை வீட்டுமனையாக மாற்ற, நத்தம் புறம்போக்கு என வகை மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு பின் மேடு, பள்ளமாக உள்ள மலைப்பகுதியை சமதளப்பரப்பாக்க வேண்டும்.
அதற்கு முன், ஆனைமலை புலிகள் காப்பத்தின், எல்லையை ஒட்டிய பகுதியாக உள்ளதால், 10 கி.மீ., சுற்றளவு உள்ள பகுதியை காப்புக்காடாக வனத்துறை அறிவித்துள்ளது.
அதே போல், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும், மலையை குடைந்து அமைக்கப்பட்டதும், ஆழமான மற்றும் அதிக வேகத்துடன் நீரோட்டம் உள்ள காண்டூர் கால்வாய் வழியாக சென்று, கால்வாயை கடந்து, இந்த நிலத்திற்கு செல்ல வேண்டும்.
இதனால், வனத்துறை, பொதுப்பணித்துறை தடையின்மை சான்று பெற வேண்டும். ஏற்கனவே கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலம் ஆய்வு செய்து, வீட்டுமனை பட்டா வழங்க தகுதியற்ற இடம் என பல மாவட்ட கலெக்டர்கள் ஒதுக்கியுள்ளனர்.
தளி பேரூராட்சியை சேர்ந்த ஆளும்கட்சியினர் மக்களிடம், இந்த இடத்தை பார்த்து, பிடித்திருந்தால் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி, மக்களை திரட்டியுள்ளனர். இதை அறிந்த எதிர்க்கட்சியினரும், பல்வேறு கிராம மக்களை 'கிளப்பி' விட்டுள்ளனர்.

