/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எழுத்து வடிவ மொழிகள் நம் நாட்டில் அதிகம்' பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் பெருமிதம்
/
'எழுத்து வடிவ மொழிகள் நம் நாட்டில் அதிகம்' பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் பெருமிதம்
'எழுத்து வடிவ மொழிகள் நம் நாட்டில் அதிகம்' பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் பெருமிதம்
'எழுத்து வடிவ மொழிகள் நம் நாட்டில் அதிகம்' பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் பெருமிதம்
ADDED : மார் 08, 2025 11:17 PM

திருப்பூர்: திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை, மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், உலக தாய்மொழி தின சிறப்பு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை இணை பேராசிரியர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் சகாயராணி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரை உதவி பேராசிரியர் செங்கமுத்து அறிமுகம் செய்தார்.
கருத்தரங்கில், திண்டுக்கல், காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலை, தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்தகுமார் பேசியதாவது:
மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான கருவியல்ல. மொழி ஒரு பண்பாட்டு பொதி. நமது பண்பாட்டை சுமந்து, நம் நம்பிக்கை, பழக்கவழக்கம், சிந்தனை, கலைகள் உள்ளிட்டவற்றை தாங்கி நிற்பது மொழி தான். மொழி இனத்தை, மக்களை ஒருமைப்படுத்துகிறது.
மொழி இல்லையென்றால், சிந்தனை இல்லை. மொழி இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மொழி இல்லாமல் எப்படி தகவலை பரிமாறிக்கொள்ள முடியும்? மொழி என்பது அறிவை ஆக்கும் திறன்கொண்டது.
மொழிக்கும், அறிவுக்கும், அதிகாரத்துக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது.
அறிவு என்பது ஆக்கமாக்கும் கருவி. மொழிக்கும், அறிவுக்கும், அதிகாரத்துக்கும் தொடர்பு உள்ளது. கலாசாரத்துக்கும் மொழிக்கும் தொடர்பு இருப்பது போல், மொழிக்கும், அறிவுக்கும் தொடர்பு இருக்கிறது. மொழி வழியாக தான் அறிவு உருவாக்கம் பெறுகிறது; அந்த அறிவே அதிகாரம் செய்கிறது. அரசியல் சட்ட அமைப்பில், 22 மொழிகள் அங்கீகாரிக்கப்பட்டிருந்தாலும், நம் மக்கள் நாவில் தவழும் மொழிகள் ஆயிரக்கணக்கில் உள்ளது.
உலகில், 6,900 மொழிகள் பேசப்படுகிறது. இவற்றில், 1,652 மொழிகள் (10 சதவீதம்) இந்தியாவில் பேசப்படுகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தாய்மொழிகள். உலகிலேயே அதிகமான (113 மொழிகளில்) மொழிகளில் பத்திரிக்கை வெளிவரும் ஒரே நாடு இந்தியா தான்.
பேசுவது எத்தனை மொழிகளாக இருக்கலாம்.
ஆனால், எழுத்து வடிவத்தில், எழுத, படிக்க தெரியும் வகையில் அதிக மொழிகள் இந்தியாவில் இருப்பதால் தான் இவ்வளவு மொழிகளில் பத்திரிகைகள் வெளியாகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைச் செயலாளர் சசிகலா, மாவட்ட செயலாளர் பழனிசாமி, கல்லுாரி உதவி பேராசிரியர் மகேஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் விஜயராஜ், கிரிஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

