/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் 'ஒளிராத' தெரு விளக்குகள்; மக்கள் தவிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் 'ஒளிராத' தெரு விளக்குகள்; மக்கள் தவிப்பு
பஸ் ஸ்டாண்டில் 'ஒளிராத' தெரு விளக்குகள்; மக்கள் தவிப்பு
பஸ் ஸ்டாண்டில் 'ஒளிராத' தெரு விளக்குகள்; மக்கள் தவிப்பு
ADDED : செப் 04, 2024 11:24 PM

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டிலுள்ள, உயர் கோபுர மின் விளக்கு மற்றும் தெரு விளக்குகள் எரியாததால், இருட்டில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் கோவை, திருப்பூர், பழநி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில், குடிநீர், கழிப்பிடம், இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், பயணியர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளும் எரிவதில்லை. ரவுண்டானா பகுதியிலுள்ள உயர் மின் கோபுர விளக்கு மற்றும் பயணிகள் காத்திருக்கும் பகுதி, பஸ்கள் நிற்கும் பகுதியிலுள்ள மின் விளக்குகள் எரியாமல், பஸ் ஸ்டாண்ட் இருளில் காணப்படுகிறது.
இதனால்,இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்குள் காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனே காத்திருக்கும் நிலை உள்ளது. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.
எனவே, பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள உயர் கோபுர மின் விளக்கு மற்றும் விளக்குகளை முறையாக பராமரித்து, ஒளிரச்செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.