ADDED : ஆக 09, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;பொங்கலுார் அருகே அலகுமலை அடிவாரத்தில் பயணியர் நிழற்குடை கட்டடம் உள்ளது.
தரமற்ற கட்டுமானத்தால் நிழற்குடையின் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. மழை பெய்தால் பயணிகள் பாதுகாப்பான இடங்களைத் தேடி செல்வர். மழைக்கு நிழற்குடை அருகே பயணிகள் சென்றால் இடிந்து தலையில் விழும் அபாயம் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும் முன், ஆபத்தான நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.