/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எமிஸ்' இணையதளத்தில் மாணவர் விபரம் பதிவேற்றம்
/
'எமிஸ்' இணையதளத்தில் மாணவர் விபரம் பதிவேற்றம்
ADDED : ஜூலை 11, 2024 10:20 PM
உடுமலை : ஒவ்வொரு கல்வியாண்டிலும், மாணவர்களின் அனைத்து விபரங்களும் பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளமான எமிஸில் பதிவு செய்யப்படுகிறது.
புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களின் எடை, உயரம் பதிவு மற்றும் ஏற்கனவே இருப்பவர்களின் விபரங்கள் சரிபார்த்தல், மாற்றம் செய்யும் பணிகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாறுதல் செய்திருக்கும் மாணவர்களின் விபரங்களும் புதுபிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட உயரத்துக்கு ஏற்ப எடை குறைவாகவும், அல்லது அதிகமாக இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கு தற்போது எமிஸ் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பணிகளை விரைந்து முடிக்க முடியும். எடை, உயரம் பதிவுகள் முடிந்த உடன், அடுத்தடுத்து ஒவ்வொரு விபரங்களாக பதிவு செய்வதற்கு கல்வித்துறையின் சார்பில் அறிவுறுத்தப்படும்' என்றனர்.

