/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடவடிக்கை கோரி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
/
நடவடிக்கை கோரி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 28, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;உடுமலை வட்டம் கணக்கம்பாளையம் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்த கருப்பசாமி என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவிநாசி தாசில்தார் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிநாசி தாலுகாவிற்குட்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

