/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை - மூணாறு ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு தடை
/
உடுமலை - மூணாறு ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு தடை
உடுமலை - மூணாறு ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு தடை
உடுமலை - மூணாறு ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு தடை
ADDED : மார் 03, 2025 06:43 AM
உடுமலை; திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரள மாநிலம் மூணாறு செல்லும் ரோடு, இரு மாநிலங்களை இணைக்கும் பிரதான வழித்தடமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில், முழுதும் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரோட்டில், கேரள மாநிலம் சின்னாறு முதல் மறையூர் வரை, 16 கி.மீ., துாரம் உள்ள ரோடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
இதனால், இன்று முதல் வரும் 30ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், என கேரள பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
ஒரே வழித்தடமாக உள்ளதால், குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் வாகனங்கள், கேரள மாநிலம், மறையூர் மற்றும் சின்னாறு எல்லை, வனத்துறை சோதனைச்சாவடியில் நிறுத்தப்படும். பொதுமக்கள், சுற்றுலா பயணியர், சரக்கு வாகனங்களை இயக்குவோர் முன்னதாக திட்டமிட்டு பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.