/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவிலில் விடிய விடிய கலை விழா
/
அவிநாசி கோவிலில் விடிய விடிய கலை விழா
ADDED : பிப் 27, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு விடியவிடிய கலை விழா நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை துவங்கிய, கரூர் குமார சாமிநாத தேசிகர் குழுவினரின் சிறப்பு திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, அவிநாசி சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூட மாணவியர் 'ஈசனுடன் ஓர் இரவு' என்ற தலைப்பில், பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். பக்தர்கள் விடியவிடிய கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, கம்பியால் தடுப்பு அமைக்கப்பட்டு, குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தனர்.

