/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்ய விகாசினி, பிரன்ட்லைன் பிரமாதம்
/
வித்ய விகாசினி, பிரன்ட்லைன் பிரமாதம்
ADDED : ஆக 23, 2024 02:20 AM

திருப்பூர்:திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர் வாலிபால், 19 வயது பிரிவில், வெற்றியை கைப்பற்ற பிரன்ட்லைன் பள்ளி, வித்ய விகாசினி பள்ளி அடுத்தடுத்து திறமை காட்டியதால், போட்டியில் விறுவிறுப்பு கூடியது.
திருப்பூர், அலகுமலை, ஸ்ரீ அலகுமலை வித்யாலயா பள்ளியில், தெற்கு குறுமைய மாணவர் வாலிபால் போட்டி நேற்று நடந்தது. 14 வயது பிரிவில், 18, பதினெழு வயது பிரிவில், பத்து, 19 வயது பிரிவில், எட்டு என மொத்தம், 36 பள்ளி அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றன.
பதினான்கு வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் வேலவன் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில் வித்ய விகாசினி பள்ளி, விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வென்றது. 14 மற்றும், 17 வயது பிரிவு இரண்டையும் வித்யவிகாசினி பள்ளி அணி கைப்பற்றி, 19 வயது பிரிவிலும் வெற்றி பெற முனைப்பு காட்டியது.
ஆனால், துவக்கம் முதலே பிரன்ட்லைன் பள்ளி அணி அதிரடி காட்டியது. ஒரு கட்டத்தில், 1 - 1 என இரு அணிகளும் தலா ஒரு செட்டை கைப்பற்ற, மூன்றாவது செட்டில், பிரன்ட்லைன் அணி அபார திறமை காட்டி வெற்றி பெற்றது.
நிறைவில், 2 - 1 என்ற செட் கணக்கில், பிரன்ட்லைன் பள்ளி வெற்றி பெற்றது.

