/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகாஸ் வித்யாலயா பட்டமளிப்பு விழா
/
விகாஸ் வித்யாலயா பட்டமளிப்பு விழா
ADDED : மார் 29, 2024 12:58 AM

திருப்பூர்;திருப்பூர், ஸ்ரீ நகர், விகாஸ் வித்யாலயா பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கு பட்டமளிப்பு விழா, பரிசளிப்பு விழா நடந்தது.
குழந்தை பருவ கல்வியாளர் மதுமதி கார்த்திக் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஆர்.வி., டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் குமார், பரிசுகளை வழங்கினார். பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி மழலை வகுப்புகளுக்கு பட்ட மளித்து பேசினார். பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றினார்.
துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் பரிசு வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதாராமசாமி, துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

