/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2024 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், உடுமலை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம உதவியாளர் சங்கம் சார்பில், கிராம உதவியாளர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கவும், கருணை அடிப்படையில் பணி நியமனம், 'சிபிஎஸ்' திட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக இறுதி தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை தாலுகா அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். செயலாளர் முருகவேல், மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துச்சாமி, பாலமுருகன், கிட்டு, நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.