/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா 458 சிலைகள் பிரதிஷ்டை
/
விநாயகர் சதுர்த்தி விழா 458 சிலைகள் பிரதிஷ்டை
ADDED : செப் 07, 2024 03:05 AM
உடுமலை;விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஹிந்து அமைப்புகள் சார்பில், உடுமலை பகுதிகளில், 458 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
உடுமலை பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்படுகிறது.
அதே போல், ஹிந்து முன்னணி, வி.எச்.பி.,ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து சாம்ராஜ்யம், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆன்மிகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விநாயகர் சிலைகள், மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
அதன் அடிப்படையில், ஹிந்து முன்னணி, உடுமலை நகரம், உடுமலை தெற்கு, மேற்கு, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 9 மற்றும், 10 ஆகிய தேதிகளில், விசர்ஜனம் செய்யப்படுகிறது.
அதே போல், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில், உடுமலை நகரம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 458 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 8ம் தேதி முதல், 11ம் தேதி வரை, தினமும் ஊர்வலம் நடத்தப்பட்டு, அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.