/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு மாநகர போலீசார் ஆயத்தம்
/
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு மாநகர போலீசார் ஆயத்தம்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு மாநகர போலீசார் ஆயத்தம்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு மாநகர போலீசார் ஆயத்தம்
ADDED : ஆக 18, 2024 11:53 PM
திருப்பூர்:வரும், செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா.
ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சில மாதங்களாக, திருப்பூரில், இரண்டு இடங்களில் மும்முரமாக நடந்து வந்தது. சிலைகள் தயாராகியுள்ளன. இம்மாத இறுதியில் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் சிலைகள் நிறுவப்பட உள்ளது. மாநகரில், ஆயிரம் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி தலைமையில் நடந்தது. சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு, அதன் பின்பு மற்றும் ஊர்வலம் ஆகிய காலகட்டத்தில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
சிலை வைக்கும் இடம், பிரதிஷ்டை ஆகியவற்றை டி.ஜி.பி., யின் வழிகாட்டுதலை போலீசார் முறையாக பின்பற்றி அனுமதி அளிக்க வேண்டும். அந்தந்த சரக பகுதியில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் ஹிந்து அமைப்புகளை அழைத்து கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.