/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதி மீறும் இரு சக்கர வாகனங்கள்; பஸ் ஸ்டாண்டில் பயணியர் பாதிப்பு
/
விதி மீறும் இரு சக்கர வாகனங்கள்; பஸ் ஸ்டாண்டில் பயணியர் பாதிப்பு
விதி மீறும் இரு சக்கர வாகனங்கள்; பஸ் ஸ்டாண்டில் பயணியர் பாதிப்பு
விதி மீறும் இரு சக்கர வாகனங்கள்; பஸ் ஸ்டாண்டில் பயணியர் பாதிப்பு
ADDED : மே 09, 2024 11:23 PM
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில், இரு சக்கர வாகனங்கள் விதிகளை மீறி, பயணியருக்கு இடையூறாக இயக்கப்படுகிறது.
உடுமலை, பஸ் ஸ்டாண்டில் நாள்தோறும், தொலை துார மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு செல்ல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.
அவர்களை பாதிக்கும் வகையில், பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் ஓட்டிச்செல்வது, இடையூறு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு, நகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு போதியளவு கண்காணிப்பு இல்லாததால், வாகனங்களை ஓட்டிச்செல்வது மட்டுமின்றி, அனுமதியில்லாத மற்றும் பயணியர் நடந்து செல்லும் வழித்தடங்களில் வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர்.
உடுமலை - பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில் நுழைவதற்கு, தாராபுரம் ரோடு பிரிவு வரை சென்று திரும்ப வேண்டிய நிலையால், சரக்கு வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் பஸ் ஸ்டாண்டின் வழியாக செல்கிறது.
பஸ்சை பிடிக்க வெளியிலிருந்து விரைந்து வரும் பயணியர், குறுக்கே வரும் வாகன ஓட்டுநர்களால் தடுமாறுகின்றனர். பஸ்சை பிடிக்க முடியாமலும் சில சமயம் இடையூறு ஏற்படுகிறது.
விதிமுறை மீறுவோர் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.