sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு; என்னென்ன காரணங்கள்?

/

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு; என்னென்ன காரணங்கள்?

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு; என்னென்ன காரணங்கள்?

ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவு; என்னென்ன காரணங்கள்?


ADDED : ஏப் 27, 2024 11:36 PM

Google News

ADDED : ஏப் 27, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:அதிக வாக்காளரை கொண்ட, திருப்பூர் வடக்கு தொகுதியில் ஓட்டுப்பதிவு வெகுவாக குறைந்ததே, ஒட்டுமொத்த தொகுதிக்கான ஓட்டுப்பதிவு குறைய காரணம் என, அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் லோக்சபா தொகுதியில், 1,745 ஓட்டுச்சாவடிகள் அமைத்து, ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள, 16 லட்சத்து, 08 ஆயிரத்து, 521 வாக்காளரில், 11 லட்சத்து, 35 ஆயிரத்து, 267 பேர் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில், கடந்த தேர்தலை காட்டிலும் குறைவான அளவாக, 70.58 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

தேய்ந்த 'வடக்கு'

அதிகபட்ச வாக்காளராக, திருப்பூர் வடக்கு தொகுதியில், மூன்று லட்சத்து, 93 ஆயிரத்து, 455 வாக்காளர் உள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 19 ஆயிரத்து, 27 ஆண், ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 98 பெண், 60 திருநங்கையர் என, இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 916 பேர் ஓட்டளித்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில், 59.27 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், 76 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. திருப்பூரில் ஓட்டுப்பதிவு சரிந்ததால், ஒட்டுமொத்த ஓட்டுப்பதிவும் குறைந்துவிட்டது. குறிப்பாக, லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைய, திருப்பூர் வடக்கு தொகுதியே முக்கிய காரணம்.

ஊரகத்தில்

70.98 சதவீதம்

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில், திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டம்பாளையம், சொக்கனுார், மேற்குபதி, தொரவலுார், வள்ளிபுரம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம் ஊராட்சிகள்; மாநகராட்சியின், 29 வார்டுகள் அடங்கியுள்ளன.

கிராமப்புறங்களை உள்ளடக்கிய, 10 ஊராட்சிகளில், 53 ஆயிரத்து, 944 வாக்காளரும்; மாநகராட்சியின், 29 வார்டுகளில், மூன்று லட்சத்து, 39 ஆயிரத்து, 511 வாக்காளரும் உள்ளனர். கடந்த வாரம் நடந்த ஓட்டுப்பதிவில், ஊரக பகுதிகளில், 38 ஆயிரத்து, 293 பேர் ஓட்டளித்துள்ளனர்; மாநகராட்சி பகுதியில், ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து, 623 பேர் ஒட்டுப்பதிவு செய்துள்ளனர்.

அதாவது, மூன்று லட்சத்து, 39 ஆயிரத்து, 511 நகர்ப்புற வாக்காளரில், ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து 623 பேர் மட்டும் (57.61 சதவீதம்) ஓட்டளித்துள்ளனர். ஊரகத்தில், அமைக்கப்பட்ட, 53 ஓட்டுச்சாவடிகளில், 70.98 சதவீதம் பேர் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம், மாநகராட்சியின், 29 வார்டுகளில் ஓட்டுப்பதிவு குறைந்ததே, ஒட்டுமொத்த ஓட்டுப்பதிவு சரிவுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

குறைந்தபட்சம்

41.70 சதவீதம்

வடக்கு தொகுதியில் மிகக்குறைந்த அளவாக, எம்.எஸ்., நகரில் உள்ள, 237 வது பூத்தில், ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. 717 வாக்காளர் உள்ள நிலையல், 152 ஆண், 147 பெண் என, 299 பேர் (41.70 சதவீதம்) மட்டும் ஓட்டளித்துள்ளனர். மேலும், 272வது 'பூத்'தில் 355 பேர் மட்டும் ஓட்டளித்துள்ளனர்.

இதுதவிர, 274, 292, 302, 306, 308, 325, 333, 343, 340, 341, 363, 377 உள்ளிட்ட 'பூத்'களில், 329 முதல், 377 ஓட்டுக்கள் வரை மட்டும் பதிவாகியுள்ளன. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், 55 சதவீதம் அளவுக்கு மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது; ஒரு சில பூத்தில் மட்டுமே, 82 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு நடந்திருக்கிறது.

இரட்டை

ஓட்டுரிமை

அரசியல் கட்சியினர் கூறியதாவது:

திருப்பூரை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 50 ஆயிரம் வாக்காளர் புதிதாக சேர்ந்து கொண்டே இருந்தனர்; கடந்த சில ஆண்டுகளாக, ஒரே பாகம் மற்றும் ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்ற வாக்காளர் நீக்கப்பட்டனர். இதனால், ஓரளவு போலி வாக்காளர் நீக்கப்பட்டனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும், திருப்பூரில் வசிக்கின்றனர்; சொந்த ஊரிலும், ஓட்டுரிமை வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில், சொந்த ஊரில் இருந்து அழைப்பு வந்ததும், குடும்பத்துடன் சென்றுவிடுகின்றனர். இதனால்தான், திருப்பூர் தொகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைகிறது.

ஆதார் இணைப்பு அவசியம்

பொது வினியோக திட்டத்தில் ஆதாரை இணைத்ததன் மூலமாக, போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டன; ரேஷன் திட்டம் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாக்காளரின் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கினால் மட்டுமே, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், செம்மையான பட்டியலை தயாரிக்க முடியும். அரசியல் கட்சிகள், வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை அறியவும், வாக்காளரின் ஆதார் இணைப்பு கை கொடுக்கும்.



கொஞ்சம் கவனியுங்க!

கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், மொத்த வாக்காளர், ஒன்பது லட்சத்து, 93 ஆயிரத்து, 758 பேர் இருந்தனர்; அப்போது, 74.64 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அடுத்து, 2014 தேர்தலில், 13 லட்சத்து, 75 ஆயிரத்து, 589 வாக்காளர் இருந்தனர்; 76.36 சதவீதம் பேர் ஓட்டளித்தனர்.கடந்த, 2019 தேர்தலில், 15 லட்சத்து, 30 ஆயிரத்து, 14 வாக்காளர் இருந்தனர்; அவர்களில், 11 லட்சத்து, 15 ஆயிரத்து, 693 பேர் (73.21 சதவீதம்) ஓட்டளித்தனர். அதாவது, 2009 தேர்தலில், 2.50 லட்சம் வாக்காளர் ஓட்டளிக்கவில்லை; 2014ல், 3.50 லட்சம் பேர் அளவுக்கு ஓட்டுப்பதிவு செய்யவில்லை; 2019 தேர்தலில், 4.15 லட்சம் பேல் ஓட்டுப்பதிவு செய்யவில்லை என்று தேர்தல் கமிஷனின் புள்ளிவிவரம் கூறுகிறது.அந்த வரிசையில் பார்த்தால், இத்தேர்தலில், 4.73 லட்சம் வாக்காளர் ஓட்டளிக்கவில்லை என்று தெரியவருகிறது. ஆகமொத்தம், கடந்த, 15 ஆண்டுகளாகவே, போலி வாக்காளர் உருவாக்கம் அதிகப்படியாக நடந்துள்ளது. அடிக்கடி இடம்பெயர்ந்த தொழிலாளர், புதிது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். அதாவது, சொந்த மாவட்டத்தில் ஓட்டுரிமை இருக்கும்.அத்துடன், திருப்பூரிலும், இரண்டு முதல் மூன்று இடங்களில் ஓட்டுரிமை இருக்க வாய்ப்புள்ளது. இனிவரும் தேர்தல்களிலும், இதேபோல், ஓட்டுப்பதிவில் சரிவு இருக்கத்தான் செய்யும்; வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.








      Dinamalar
      Follow us