/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் 'சீல்'
/
ஓட்டு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் 'சீல்'
ADDED : மார் 25, 2024 12:32 AM

பல்லடம்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டசபை தொகுதி, கோவை லோக்சபா தொகுதியின் கீழ் வருகிறது.
தேர்தலை முன்னிட்டு, நகர பகுதியில், 137 புறநகர் பகுதியில், 275 என, மொத்தம், 412 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான, ஓட்டுப் பெட்டிகள் நேற்று, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன், கன்டெய்னர்லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டன. இதில், 498 கன்ட்ரோல் யூனிட், 498 பேலட் யூனிட் மற்றும் 539 வி.வி., பேட் ஆகியவை பல்லடம் வந்தன.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், தேர்தல் அலுவலர்கள் ஜீவா, சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் ஓட்டு இயந்திரங்கள் இறக்கும் பணி துவங்கியது.
முன்னதாக, ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்படும் ஸ்ட்ராங் ரூம், ஏற்கனவே தயார் செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளது.
ஓட்டு இயந்திரங்கள் தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், சரிபார்க்கப்பட்ட பின், ஸ்ட்ராங் ரூமுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

