/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூலி உயர்வு பேச்சுவார்த்தை :விசைத்தறியாளர் அதிருப்தி
/
கூலி உயர்வு பேச்சுவார்த்தை :விசைத்தறியாளர் அதிருப்தி
கூலி உயர்வு பேச்சுவார்த்தை :விசைத்தறியாளர் அதிருப்தி
கூலி உயர்வு பேச்சுவார்த்தை :விசைத்தறியாளர் அதிருப்தி
ADDED : ஆக 10, 2024 10:54 PM
பல்லடம்;மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, ஜவுளி உற்பத்தியாளருடன், கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த, 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்ட கூலியில் இருந்து, 15 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இடை ஏற்றுக்கொண்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்கி வந்தனர். கடந்த சில மாதங்களாக மீண்டும் கூலியை குறைத்து வழங்கி வருவதாக , விசைத்தறி உரிமையாளர்கள் புகார் அளித்திருந்தனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் தலைமையில், நேற்று முன்தினம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், ஜவுளி உற்பத்தியாளர் ஒருவர் மட்டுமே வந்திருந்ததால், குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், சோமனுாரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், புதிய கூலி உயர்வை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தைக்கும் நேற்று முன்தினம் திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதில், விசைத்தறி சங்க நிர்வாகிகள் வந்திருந்த நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் யாருமே பங்கேற்கவில்லை.
விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''ஒவ்வொரு முறை கூலி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் போதும், ஜவுளி உற்பத்தியாளர்கள் அதனை நிராகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், முறையாக கிடைக்க வேண்டிய கூலி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களை கட்டாயம் பங்கேற்க செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

