/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காத்திருப்பு போராட்டம்; இ.கம்யூ., கட்சி முடிவு
/
காத்திருப்பு போராட்டம்; இ.கம்யூ., கட்சி முடிவு
ADDED : மார் 06, 2025 06:29 AM
அனுப்பர்பாளையம்; ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ளாவிட்டால், காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூ., கட்சி அறிவித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 7வது வார்டு போயம் பாளையம், கணபதி நகர், சக்தி நகர், சதாசிவம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லை.
தார் சாலை வசதி கேட்டு அப்பகுதி இ.கம்யூ கட்சியினர் பொது மக்களுடன் இணைந்து மேயர் மற்றும் துணை மேயரிடம் முறையிட்டனர். துணை மேயர் சம்மந்தப்பட்ட ரோடுகளை ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்து பணி செய்து வருவதாக உறுதி கூறினார்.
அதனை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு செய்தும், பணி நடக்கும் இடத்தை தேர்வு செய்த பின்னரும், சிலர் திட்டமிட்டு பணியை துவங்காமல் தாமதிப்பதாக இ.கம்யூ கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, ரோடு பணியை காலம் கடத்தாமல் விரைவாக முடிக்க வலியுறுத்தி, இ.கம்யூ., கட்சியினர், வரும், 13ம் தேதி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் பொதுமக்களை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.