/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
/
வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ADDED : மார் 05, 2025 03:42 AM
அனுப்பர்பாளையம்:ஊராட்சி முதல் மாநகராட்சி வரை வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் ஒன்றியம், தொரவலூர் ஊராட்சியில், இதுவரை 38 சதவீதமே வரி வசூல் ஆகி உள்ளது. வரி வசூல் மிக குறைவாக உள்ளதால் அதிகாரிகள் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
உடனடியாக வரி செலுத்த வேண்டி ஊராட்சி சார்பில், வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர். வரி செலுத்த தவறினால் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையொட்டி, வரி செலுத்தாத ஐந்து வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் நேற்று துண்டித்தனர். ஊராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, ஊராட்சி செயலாளர் மகேஷ் ஆகியோர் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பணிகளை பார்வையிட்டனர்.