/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் வினியோகம்; 6 மாதமாக குளறுபடி
/
குடிநீர் வினியோகம்; 6 மாதமாக குளறுபடி
ADDED : மார் 01, 2025 06:27 AM

திருப்பூர்; தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்தக் கோரி மாநகராட்சி 55வது வார்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டு, ஈஸ்வரமூர்த்தி நகர் பொதுமக்கள், மேயர் தினேஷ்குமாரிடம் நேற்று அளித்த மனு:
எங்கள் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இங்குள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளில் குடிநீர் உரிய வகையில் வருவதில்லை. இப்பகுதிக்கு ஆழ்குழாய் கிணற்று நீர் வசதியில்லை. அதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
இப்பகுதியினருடன் மா.கம்யூ., வைச் சேர்ந்த பொம்முதுரை, பாலன், ரமேஷ் உள்ளிட்டோர் இக்கோரிக்கை குறித்து மேயரிடம் விளக்கி, தீர்வு காண கோரிக்கை விடுத்தனர்.