/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வணிகவியல் மாணவர்களுக்கு வரவேற்பு
/
வணிகவியல் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஆக 30, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அரசு கல்லுாரியில் வணிகவியல் (சர்வதேச வணிகம்) துறை சார்பில் சர்வதேச இளைஞர் தினம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் முனைவர் நளதம் தலைமை வகித்தார்.
ராயல் கலர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் லட்சுமணன், சக்தி குழும இயக்குனர் சக்திவேல், வணிகவியல் (சர்வதேச வணிகம்) துறை தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் பேசினர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
---
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.