/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜல்லிக்கற்கள் பரப்பி நாளாச்சு... நொய்யல் கரை ரோடு என்னாச்சு?
/
ஜல்லிக்கற்கள் பரப்பி நாளாச்சு... நொய்யல் கரை ரோடு என்னாச்சு?
ஜல்லிக்கற்கள் பரப்பி நாளாச்சு... நொய்யல் கரை ரோடு என்னாச்சு?
ஜல்லிக்கற்கள் பரப்பி நாளாச்சு... நொய்யல் கரை ரோடு என்னாச்சு?
ADDED : செப் 15, 2024 01:36 AM

திருப்பூர்: நொய்யல் ஆற்றின் கரையில், ரோடு அமைக்க ஜல்லிக் கற்கள் பரப்பி பல நாட்களாகியும் ரோடு போடாமல், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நொய்யல் கரை மேம்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், நொய்யல் ஆற்றின் இரு கரையிலும், அணைமேடு முதல் மணியகாரம்பாளையம் பாலம் வரையில் தார் ரோடு அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்தில், ராயபுரம் பகுதியில் தீபம் பாலம் முதல், நடராஜா தியேட்டர் பாலம் வரையில் சாயப் பட்டறை ரோட்டில் தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இதில், தீபம் பாலம் முதல் விநாயகபுரம் பகுதி வரையான இடத்தில் இன்னும் தார் ரோடு போடப்படவில்லை. அப்பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக தார் ரோடு பணி இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது இப்பணி முடிந்த நிலையில் தார் ரோடு அமைக்க ஜல்லிக் கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டது. இங்கு கொட்டியுள்ள ஜல்லியில் ஒரு பகுதி பரப்பி விடப்பட்டுள்ளது. ஒரு பகுதி குவியலாக விடப்பட்டுள்ளது.ஏறத்தாழ ஒரு மாதமாக இந்த நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாகச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தார் ரோடு போடும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும்.