ADDED : ஆக 18, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க, பொன்விழா ஆண்டையொட்டி திருப்பூர் மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி பொங்கலுாரில் நடந்தது. ஒன்றிய குழு துணை தலைவி அபிராமி அசோகன் கவிதை போட்டியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசுகையில், 'மக்களின் அன்றாட பிரச்னைகளை கவிதைகளாக எழுத வேண்டும். ஜனநாயகம், சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்' என்றார். கவிஞர் வெற்றிச்செல்வி பேசினார்.மாவட்டத் துணைத் தலைவர் நாட்ராயன், வட்டார தலைவர் லீலா கிருஷ்ணன், பொருளாளர் சின்னச்சாமி, தி.மு.க., பொங்கலுார் ஒன்றிய செயலாளர் அசோகன், கவிஞர்கள் நறுமுகை, உடுமலை துரையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
---
முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கவிதைப்போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கினார்.

