/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாடும் முள்ளங்கி செடிகள் தடுக்க என்ன செய்யணும்?
/
வாடும் முள்ளங்கி செடிகள் தடுக்க என்ன செய்யணும்?
ADDED : பிப் 23, 2025 02:43 AM
திருப்பூர்: மலைப்பகுதியில் மட்டும் அதிகம் விளையும் சில காய்கறிகளையும், கிணற்றுப்பாசனம் மேற்கொள்ளும் மாவட்ட விவசாயிகள், சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: முள்ளங்கி சாகுபடியில், நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
வெள்ளைத்துரு நோய் வராமல் தடுக்க விதைகளை, 'திராம்' மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.
கிழங்கை நடும்முன் அவற்றை, 'அகரிமைசின்' என்ற உயிர் எதிர்க்கொல்லியை ஒரு லிட்டருக்கு, 100 மில்லி கிராம் என்ற விகிதத்தில் கலந்து நீரில் நனைத்து நடவேண்டும். இதனால், வேரழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
விதைத்த 45 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகி விடும்.களைக்கொத்திகள் மூலம் மண்ணைக் கொத்தி செடிகளை வேருடன் பிடுங்கி எடுக்கவேண்டும்.

