/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை மழை எப்போது துவங்கும்? திருப்பூரில் பொழியுமா... வெயிலின் தாக்கம் தணியுமா!
/
கோடை மழை எப்போது துவங்கும்? திருப்பூரில் பொழியுமா... வெயிலின் தாக்கம் தணியுமா!
கோடை மழை எப்போது துவங்கும்? திருப்பூரில் பொழியுமா... வெயிலின் தாக்கம் தணியுமா!
கோடை மழை எப்போது துவங்கும்? திருப்பூரில் பொழியுமா... வெயிலின் தாக்கம் தணியுமா!
ADDED : மே 03, 2024 12:39 AM
திருப்பூர்:வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், திருப்பூரில் கோடை மழை துளியாவது பெய்யுமா, வெப்பம் தணியுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
திருப்பூரில் வெயிலின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 103 முதல், 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகி, சுட்டெரிப்பதால், மதிய வேளையில் வெளியில் தலைகாட்டவே மக்கள் தயங்குகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று தான் ஆக வேண்டும் என்பவர் மட்டுமே வெளியே வருகின்றனர்.
மாலை மற்றும் இரவில் காற்று இல்லாமல், இரவில் வீடுகளுக்குள் துாங்க முடியாத படி, உஷ்ணம் அதிகமாக உள்ளது. சாலைகளில் காற்றுக்கு மக்கள் காத்திருக்கின்றனர். மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தாலும், காற்று இல்லாத நிலை இருந்தது.
தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளதால், நேற்று முன்தினம் முதல் கடந்த இரண்டு நாட்களாக மாலை, இரவில் காற்று சற்று அடிப்பதை உணர முடிகிறது; இருப்பினும், காலை முதல் மாலை வரை திருப்பூரில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
தென் தமிழகத்தில் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில், கடந்த இரண்டு மாதமாக குறிப்பிடும்படியான மழை இல்லை.
விவசாயமும் பொய்த்து போகும் நிலையில் உள்ளது. ஏற்கனவே, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.
இதனால், வருண பகவான் கருணையால் குறைந்தபட்ச கோடை மழையாவது, என்பது, திருப்பூர் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பு.