/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாளவாடி சந்தையை புதுப்பிப்பது எப்போது? கருத்துரு அனுப்பிய ஊராட்சி நிர்வாகம்
/
வாளவாடி சந்தையை புதுப்பிப்பது எப்போது? கருத்துரு அனுப்பிய ஊராட்சி நிர்வாகம்
வாளவாடி சந்தையை புதுப்பிப்பது எப்போது? கருத்துரு அனுப்பிய ஊராட்சி நிர்வாகம்
வாளவாடி சந்தையை புதுப்பிப்பது எப்போது? கருத்துரு அனுப்பிய ஊராட்சி நிர்வாகம்
ADDED : ஏப் 27, 2024 12:14 AM
உடுமலை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வாளவாடி சந்தையை மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியுள்ளது.
உடுமலை ஒன்றியத்தில், வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் வாளவாடியும் ஒன்று. இச்சந்தையை அருகிலுள்ள அம்மாபட்டி, வேலுார், பழையூர், மொடக்குபட்டி, தீபாலபட்டி உட்பட அருகிலுள்ள பல கிராமங்களில் இருந்தும் மக்கள் பயன்படுத்தினர்.
ஆனால் நாளடைவில் சந்தை பராமரிப்பில்லாமல் போனதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
தற்போதுஇங்கு, 20 மேடைகள் உள்ளன. ஆனால் அவற்றின் மேற்கூரைகள் எந்த நேரத்திலும் விழுந்து விடும் நிலையில் இருப்பதால், விவசாயிகள், வியாபாரிகள், மேடைகளை பயன்படுத்தாமல், திறந்த வெளியில்தான் பொருட்களை சந்தைப்படுத்துகின்றனர்.
முறையான பராமரிப்பில்லாமல் போனதால், சந்தையின் பயன்பாடு முடங்கி விட்டது. இப்போது வாளவாடி பகுதி மக்கள் மட்டுமே, பயன்படுத்தும் நிலையில்தான் சந்தை உள்ளது.
பராமரிப்பில்லாமல் இருப்பதால், சந்தைக்கு அருகே குப்பைக்கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. புதர்ச்செடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளும் நடமாடுகின்றன.
குப்பைக்கழிவுகளுக்கு நடுவிலும், புதர் செடிகளின் மீதும்தான் காய்களை சந்தைப்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சந்தையை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
சந்தையை ஏலம் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வராததால், தற்போது ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சந்தை பராமரிப்புக்கு சுங்கம் வசூலிக்கின்றனர். ஆனால் எந்த பணிகளும் மேற்கொள்வதில்லை.
மேற்கூரையை புதுப்பித்து வழங்குவதற்கும், சந்தையின் வளாகத்தை பராமரிக்கவும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.

