/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆவணங்கள் எங்கே?
/
சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆவணங்கள் எங்கே?
சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆவணங்கள் எங்கே?
சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆவணங்கள் எங்கே?
ADDED : ஏப் 21, 2024 11:02 PM
உடுமலை:உடுமலை அருகேயுள்ள, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, உயர் பென்சன் வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், சர்க்கரைத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம்.
உயர் பென்சன் வழங்கும் வகையில், கோவை மண்டல இ.பி.எப்.ஓ., அலுவலகத்திலிருந்து, அமராவதி சர்க்கரை ஆலை அலுவலகத்திற்கு, தொழிலாளர்கள் விபரம், ஊதிய விபரங்களை கேட்டுள்ளனர்.
ஆனால், உரிய விபரங்களை அனுப்பாமல், ஆலை நிர்வாக அதிகாரிகள், 10 மாதமாக இழுத்தடித்து வருகின்றனர். மேலாண் இயக்குனரிடம் புகார் செய்தும், அலுவலகத்திலுள்ள அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
கரும்பு பயிரிடுவோர் சங்கம் வாயிலாகவும், உரிய ஆவணங்களை வழங்க வலியுறுத்தப்பட்டும், பிரிவு அலுவலர்கள் வேலை செய்வதில்லை. எனவே, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உயர் பென்சன் பெற்றிடும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல துணை ஆணையம் அலுவலகத்திற்கு உரிய தகவல்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

