/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனத்துக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் எதற்கு?' கருத்தரங்கில் 'நச்' கேள்வி
/
'வனத்துக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் எதற்கு?' கருத்தரங்கில் 'நச்' கேள்வி
'வனத்துக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் எதற்கு?' கருத்தரங்கில் 'நச்' கேள்வி
'வனத்துக்குள் செல்லும் போது பிளாஸ்டிக் எதற்கு?' கருத்தரங்கில் 'நச்' கேள்வி
ADDED : மார் 04, 2025 06:42 AM

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், உலக வன விலங்குகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம், கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருப்பூர் வனக்கோட்ட அலுவலர் சுரேஷ்கிருஷ்ணன் பேசுகையில், ''மனிதனின் வளர்ச்சிக்கு வனவிலங்குகளின் பங்கு முக்கியமானது; வனங்களுக்கு செல்லும் போது விலங்குகளை துன்புறுத்த கூடாது; அவற்றுக்கு உணவு அளிக்க கூடாது. வனங்களுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். வன விலங்குகள் நன்றாக இருந்தால் இயற்கைசூழலும் நன்றாக இருக்கும். வன இனங்கள் புதிய பகுதிகளுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் விலங்குகள் அழியும் சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறது; இது மனிதர்களுடன் மோதலுக்கு வழிவகுக்கும்,'' என்றார்.
'வனவிலங்குகளை பாதுகாப்போம்; பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்,' எனும் தலைப்பில், என்.எஸ்.எஸ்., மாணவ செயலர்கள் மதுகார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, ஷெர்லின், லோகேஷ், திவாகர், பிரவீன், இந்துமதி, இனியா உள்ளிட்ட மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றனர்.
---
சிக்கண்ணா கல்லுாரியில் நேற்று நடந்த உலக வன விலங்குகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கில், வனக்கோட்ட அலுவலர் சுரேஷ்கிருஷ்ணன் பேசினார்.