/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலகத்தில் 'வை-பை' வசதி: கமிஷனர் தகவல்
/
நுாலகத்தில் 'வை-பை' வசதி: கமிஷனர் தகவல்
ADDED : ஆக 27, 2024 11:06 PM
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நுாலகம் மற்றும் அறிவு சார் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் தேர்வாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று இம்மையத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மண்டல உதவி கமிஷனர் வினோத், துணை செயற்பொறியாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இம்மையத்தில் பயன் பெறும் மாணவர்களைச் சந்தித்து கமிஷனர் உரையாடினார். அப்போது, மையத்தில் ஏதேனும் கூடுதல் வசதி, புதிய தலைப்பிலான நுால்கள் தேவை உள்ளதா என்பது குறித்து அவர் கேட்டார். அவரிடம் மாணவர்கள், 'வை-பை' எனப்படும் இணைய இணைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதற்கான ஏற்பாட்டினை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய கமிஷனர், விரைவில், 'வை-பை' வசதி ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.