ADDED : ஆக 06, 2024 06:44 AM
அனுப்பர்பாளையம்: அவிநாசி, கமிட்டியார் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்; இவரது மனைவி சந்தியா; பனியன் தொழிலாளர்கள். தம்பதியர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். பெருமாநல்லுார், நியூ திருப்பூர் பாலம் அருகே சென்றபோது சரக்கு வேன் மோதியது. இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவ மனை கொண்டு செல்லும் வழியில் சந்தியா இறந்தார். சக்திவேல், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி பலி
வெள்ளகோவில், கே.வி., பழனிசாமி நகரை சேர்ந்தவர் முருகேசன், 47. நுால் மில்லில் வேலை செய்து வந்தார். ஈஸ்வரன் கோவில் அருகே டூவீலரில் சென்றபோது, முன்னால் சென்ற அரசு பஸ், திடீரென நின்றது.
கட்டுப்பாட்டை இழந்த முருகேசன் டூவீலரை பஸ் மீது மோதி கீழே விழுந்தார். காயமடைந்த முருகேசன் பலியானார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.