/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலங்கோல போஸ்டர்கள் அகற்றப்படுமா?
/
அலங்கோல போஸ்டர்கள் அகற்றப்படுமா?
ADDED : ஆக 29, 2024 02:14 AM
உடுமலை: நகரின் முக்கிய ரோடுகளில், அரசு சுவர்களை அலங்கோலப்படுத்தும் போஸ்டர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, உடுமலை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகரின் முக்கிய ரோடுகளிலுள்ள சுவர்களில், தாறுமாறாக போஸ்டர்களை ஒட்டி, அலங்கோலப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கல்பனா ரோடு, கச்சேரி வீதி, ராஜேந்திரா ரோடு, பசுபதி வீதி போன்ற வீதிகளில், அரசு அலுவலக சுற்றுச்சுவர்களிலும், பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
வாகன ஓட்டுநர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், ஒட்டப்படும் போஸ்டர்களால் விபத்துகளும் ஏற்படுகிறது.
மேலும், பள்ளி, மாணவ, மாணவியர் நடந்து செல்லும் வீதிகளில், முகம் சுளிக்கும் வகையிலான, வாசகங்கள், போட்டோக்கள் கொண்ட, போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்கதையாக உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் சுவர்களிலும், கிராமப்புற பஸ் ஸ்டாப் நிழற்கூரைகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
நகரை அலங்கோலமாக காட்சியளிக்க வைக்கும், இத்தகைய போஸ்டர்களை அகற்றி, அரசு சுவர்களில், அரசுத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை எழுதினால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்.
இதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகத்தினரோடு, தன்னார்வ அமைப்பினரும், இணைந்து மேற்கொள்ளலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

