/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மறுநடவு தென்னை மரங்கள் துளிர் விடுமா?
/
மறுநடவு தென்னை மரங்கள் துளிர் விடுமா?
ADDED : மே 05, 2024 12:10 AM

திருப்பூர்;திருப்பூர், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம், ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் ஒரு பகுதியில் காலியாக உள்ள நிலத்தில் அண்மையில் 24 தென்னை மரங்கள் மறு நடவு முறையில் கொண்டு வந்து நடப்பட்டது.
இந்த தென்னை மரங்கள் அமைந்திருந்த இடத்தில், வீட்டு மனைகள் ஏற்படுத்திய நிலையில், வக்கீல் ஒருவர் முயற்சி மேற்கொண்டு, இந்த மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து வந்தார்.
மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற்று இந்த தென்னை மரங்கள் மறு நடவு முறையில், கோர்ட் வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் கொண்டு வந்து நடப்பட்டது.
மேலும் இந்த மரங்களுக்கு சொட்டு நீர் பாசனம் அடிப்படையில், நீர் விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மரங்கள் மறுநடவு செய்யும் பணியில் வேளாண் துறையினரின் அறிவுரைப்படி உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது.ஏறத்தாழ இரண்டு மாதம் முன் கொண்டு வந்து நடவு செய்யப்பட்ட மரங்களில் ஒரு சில மரங்கள் சற்று பசுமையாக காட்சியளிக்கின்றன.
மீதமுள்ள மரங்களும் விரைவில் துளிர் விட்டு, பசுமையாக வளர்ந்து பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு மறுநடவு செய்யப்பட்டுள்ள தென்னை மரங்கள் அனைத்தும் முழுமையாக துளிர்த்து வளரும் நிலையில் மினி தென்னந்தோப்பாக இந்த இடம் மாறும் நிலை உள்ளது.