ADDED : மார் 29, 2024 12:50 AM

பொங்கலுார்;பொங்கலுார் அருகே ஆபத்தான பாலத்தை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கலுாரை, ஐயப்பா நகருடன் இணைக்கும் வகையில் இரண்டு தரைமட்ட பாலங்கள் உள்ளன. இதற்கு நடுவில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மேலும் ஒரு இரும்பு பாலத்தை அமைத்தனர். வாய்க்காலில் குப்பை கொட்டுவதற்கே அந்த பாலம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தப் பாலம் கட்டப்பட்டு பத்து ஆண்டு களுக்கும் மேல் ஆகிறது. பாலத்தின் மீது போடப்பட்டுள்ள இரும்பு பிளேட் துருப்பிடித்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 20 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டோ, நிலத்தில் அடிபட்டோ உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. அந்தப் பாலத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

