/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளம், குட்டைகளில் கொட்டப்படும் குப்பை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
/
குளம், குட்டைகளில் கொட்டப்படும் குப்பை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
குளம், குட்டைகளில் கொட்டப்படும் குப்பை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
குளம், குட்டைகளில் கொட்டப்படும் குப்பை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மே 03, 2024 11:28 PM
திருப்பூர்;'ஊராட்சி நிர்வாகங்களின் துாய்மைப் பணியாளர்களே, குளம், குட்டைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, அந்தந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 95 சதவீத ஊராட்சிகளில், குப்பை கொட்டுவதற்கு இடமில்லை. ஊராட்சி துாய்மைப் பணியாளர்களால் வீடு, வீடாக சேகரிக்கப்படும் குப்பை, தரம் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யப்படுவதுமில்லை.
பெரும்பாலான ஊராட்சி நிர்வாகங்கள், சேகரிக்கப்படும் குப்பையை, ஊராட்சி பகுதியில் உள்ள குளம், குட்டையை ஒட்டிய இடங்களில் தான் கொட்டுகின்றன. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நீர்நிலைகள் பாதிக்கின்றன.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சேவூர் குளத்தில், ஊராட்சி துாய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் பாலிதீன் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,வுக்கு புகார் வழங்கினர். ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர், சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
சேவூர் குளத்தில், பஞ்சாயத்து சார்பில் குப்பைக்கழிவு, பாலிதீன் கழிவுகள் கொட்டப்பட்டு, எரியூட்டப்படுவதை உறுதி செய்தார். இதனால், குளத்தில் மாசுபடுவது, நிலத்தடி நீர் மாசுபடுவது, காற்று மாசுபடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டினார்.
அவரின் அறிக்கை அடிப்படையில், சேவூர் ஊராட்சி நிர்வாகத்துக்கு, பி.டி.ஓ., அனுப்பிய கடிதத்தில், 'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ், சேவூர் குளத்துக்கு தண்ணீர் வரவுள்ளதால், பஞ்சாயத்து கழிவுகள், பாலிதீன் கழிவுகளை கொட்டுவதையும், அவற்றை எரியூட்டுவதை தவிர்க்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இதனால், அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், 'சேவூர் குளத்தில் மீண்டும், மீண்டும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன' என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது ஒரு குறிப்பிட்ட ஊராட்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்றில்லாமல், மாவட்டத்தின் பல ஊராட்சிகளில் இத்தகைய நிலை தான் நீடிக்கிறது.
எனவே, 'மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, கிராம ஊராட்சி நிர்வாகங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்; நீர்நிலைகளில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது ஒரு குறிப்பிட்ட ஊராட்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்றில்லாமல், மாவட்டத்தின் பல ஊராட்சிகளில் இத்தகைய நிலை தான் நீடிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில், கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்