sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு அகலுமா... கல்லுாரி சுவர் சீரமைப்பு எப்போது?

/

பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு அகலுமா... கல்லுாரி சுவர் சீரமைப்பு எப்போது?

பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு அகலுமா... கல்லுாரி சுவர் சீரமைப்பு எப்போது?

பஸ் ஸ்டாப்பில் ஆக்கிரமிப்பு அகலுமா... கல்லுாரி சுவர் சீரமைப்பு எப்போது?


ADDED : மார் 11, 2025 06:14 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோடு மோசம்

அவிநாசியில் இருந்து ரங்கா நகர் செல்லும் ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். ரோடு போட வேண்டும்.

- சண்முகசுந்தரம், பழங்கரை. (படம் உண்டு)

திருப்பூர், ராக்கியாபாளையம், காளியப்பா நகர், 2வது வீதியில் தார் ரோடு போட வேண்டும். சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது.

- ஜீவித்குமார், காளியப்பா நகர். (படம் உண்டு)

மின்கம்பம் 'கிடுகிடு'

திருப்பூர், மில்லர் ஸ்டாப், லட்சுமி நகர் மெயின் ரோட்டில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. மின்விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும்.

- ஜெகதீஷ், லட்சுமி நகர். (படம் உண்டு)

ஆக்கிரமிப்பு அகலுமா?

திருப்பூர், எஸ்.ஆர்., நகர் தெற்கு வீதியில் வாகனங்கள் சாலையில் இடையூறாக நிறுத்தப்படுகிறது. எதிர்புறம் டிரான்ஸ்பார்மர் இடைஞ்சலாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- அருண், எஸ்.ஆர்., நகர். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, பெட்ரோல் பங்க் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் கால்வாயில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைக்க வேண்டும்.

- சுந்தரி, பாளையக்காடு. (படம் உண்டு)

பாதுகாப்பு அவசியம்

திருப்பூர், கணியாம்பூண்டி - காவிலிபாளையம் சாலையில் ரோட்டோரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கனரக, இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி விழுந்தால், ஆபத்து நிச்சயம். ரோட்டோரத்தில் பாதுகாப்பு வசதி ஏற்படுத்திட வேண்டும்.

- சக்திவேலு, கணியாம்பூண்டி. (படம் உண்டு)

தடுப்புச்சுவர் சேதம்

திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி முன்புற தடுப்புச்சுவர், வாகனம் மோதி சேதமடைந்துள்ளது. மேலும் சேதமாகி விழும் முன், சீரமைத்திட வேண்டும்.

- கருப்புசாமி, பல்லடம் ரோடு. (படம் உண்டு)

சாலை சீராகுமா?

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, மேல்நிலை நீர்தேக்க தொட்டி முன்புறம் சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

- ராம்பிரகாஷ், தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

பயணியர் தவிப்பு

திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர் ஸ்டாப்பில் நிழற்குடை முன் விளம்பர பதாகை வைக்கப்படுகிறது. பஸ் ஏற காத்திருக்கும் மக்கள் நிற்க இடமில்லை.

- மனோகர், பாண்டியன் நகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

ஒளிர்கிறது விளக்கு

திருப்பூர் எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப் ரயில்வே உயர்மட்ட பாலத்தில், தெருவிளக்கு எரியாதது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்ததால், தெருவிளக்கு ஒளிர்கிறது.

- ஜெயசங்கர், சேர்மன் கந்தசாமி நகர். (படம் உண்டு)

டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு

ஊத்துக்குளி, எஸ்.பெரியபாளையம் ஊராட்சி, குளத்துப்பாளையம், விநாயகர் கோவில் வீதியில் டிரான்ஸ்பார்மர் விரிசல் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. 'தினமலர்' செய்தி வெளியான பின், சரி செய்துள்ளனர்.

- மோகன், குளத்துப்பாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us