ADDED : பிப் 25, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், (இ.கம்யூ.,) கலெக்டரிடம் அளித்த மனு: திருப்பூர் அவிநாசி ரோடு, தண்ணீர்பந்தல் காலனி பஸ் ஸ்டாப் பகுதியிலிருந்து வேலம்பாளையம் செல்லும் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ரோட்டில் தனியார் காஸ் குழாய் பதிப்பு மற்றும் கேபிள் பதிப்பு பணிக்கு குழி தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணியும் முடிந்துவிட்டது. குழிகள் மீது மண் கொட்டி மூடியதோடு சரி; ரோடு அமைக்கப்படவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான மக்களும், வாகனங்களும் பயன் படுத்தும் இந்த ரோட்டை, தற்போது பயன்படுத்த முடியவில்லை. அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. ரோட்டை சீரமைக்க வேண்டும்.

