/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துார்வாரப்படாத கால்வாய் கடைமடைக்கு வருமா நீர்?
/
துார்வாரப்படாத கால்வாய் கடைமடைக்கு வருமா நீர்?
ADDED : ஆக 19, 2024 11:55 PM
திருப்பூர்:பி.ஏ.பி., கால்வாய் துார்வாரப்படாததால், கடைமடைக்கு நீர் வந்து சேருமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பி.ஏ.பி., அணைகள் நிரம்பிய நிலையில், பாசனத்துக்காக விவசாயிகளின் தொடர் கோரிக்கையின் விளைவாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடைமடை பகுதி, திருப்பூர் மாவட்டம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ளன. இங்கு கால்வாய் துார்வாரப்படாததால், திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை வந்து சேருமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
பி.ஏ.பி., பாசனக் கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) பாதுகாப்பு குழு தலைவர் வேலுசாமி கூறியதாவது:
பகிர்மான வாய்க்காலில் மண், கட்டை மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. உப பகிர்மான வாய்க்கால் பெருமளவு காணவில்லை.
வாய்க்கால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என, ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியும், எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது திறந்துவிடப்படும் தண்ணீர், அடுத்த இரு ஆண்டுகளுக்கு நீர் ஆதாரமாக அமையவுள்ள நிலையில், பி.ஏ.பி., நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
கால்வாயை சுத்தம் செய்து கொள்ள சாதாரண, சிறு விவசாயிகளால் முடிவதில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

