/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட் புறக்கணிப்பு வாபஸ் வக்கீல்கள் பணிக்கு திரும்பினர்
/
கோர்ட் புறக்கணிப்பு வாபஸ் வக்கீல்கள் பணிக்கு திரும்பினர்
கோர்ட் புறக்கணிப்பு வாபஸ் வக்கீல்கள் பணிக்கு திரும்பினர்
கோர்ட் புறக்கணிப்பு வாபஸ் வக்கீல்கள் பணிக்கு திரும்பினர்
ADDED : ஆக 06, 2024 06:40 AM
திருப்பூர்: கடந்த ஜூலை 1 முதல், மத்திய அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சில திருத்தங்களை அமல்படுத்தியது. இதை திரும்ப பெறக் கோரி தமிழகத்தில், வக்கீல்கள் கோர்ட் புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உண்ணாவிரதம், டில்லியில் ஆர்ப்பாட்டம் என போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்று பணிக்குத் திரும்ப, 'ஜாக்' அமைப்பு முடிவு செய்தது.
நேற்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கோர்ட்களிலும் வக்கீல்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்றனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து கோர்ட்களிலும் வக்கீல்கள் நேற்று வழக்கம் போல் கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
வரும் 28ம் தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.