sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் பலி; இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு

/

சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் பலி; இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு

சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் பலி; இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு

சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண் பலி; இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு


ADDED : மார் 13, 2025 06:52 AM

Google News

ADDED : மார் 13, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அவிநாசி அருகே, பழங்கரை, ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன், 29. இவரது மனைவி ரம்யா, 28. தம்பதியருக்கு 8 வயதில் மகள் உள்ளார்.

இரண்டாவது முறை கர்ப்பம் தரித்த ரம்யா, துலுக்கமுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ரம்யா, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதேநேரம், பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு காரணமாக, ரம்யா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், ஆரம்ப சுகாதாரமையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ரம்யாவின் கணவர் லோகநாதன் மற்றும் உறவினர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, மனு அளித்தனர்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

கர்ப்பிணியான எனது மனைவி ரம்யாவுக்கு, 16ம் தேதி பிரசவம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) வழக்கமான பரிசோதனைக்காக துலுக்கமுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றோம்.

பிரசவ வலி ஏற்படாத நிலையிலேயே, உடனடியாக பிரசவத்துக்காக அனுமதித்தனர். 4:26 மணிக்கு குழந்தை பிறந்த நிலையில், 6:00 மணிக்கு உள்ளே சென்று பார்த்தபோதுதான் எனது மனைவி ரம்யா இறந்தது தெரியவந்தது.

அதிக ரத்த போக்கு ஏற்பட்ட நிலையில், ஆரம்ப சுகாதார நிலைத்தில் ரத்தம் கொடுக்க வசதிகள் இல்லாதது, மருத்துவரின் தவறான சிகிச்சையே, ரம்யாவின் இறப்புக்கு காரணம். ஆகவே எனது மனைவியில் இழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரம்யாவின் உறவினர்கள் மத்தியில் பேசிய கலெக்டர், அவரின் குடும்பத்திற்கு கலெக்டரின் நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.






      Dinamalar
      Follow us