/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் மகளிர் நல மருத்துவ முகாம்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் மகளிர் நல மருத்துவ முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் மகளிர் நல மருத்துவ முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் மகளிர் நல மருத்துவ முகாம்
ADDED : மார் 15, 2025 12:16 AM
திருப்பூர்; திருப்பூர், ரேவதி மெடிக்கல் சென்டரின், 30வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சிறப்பு மகப்பேறு, கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ ஆலோசனை முகாம், இன்றும், நாளையும் (15, 16ம் தேதி) நடக்கிறது.
அதன் தலைவர்டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம், காலை, 9:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடைபெறும். முகாமில் சிறப்பு மகளிர் நல மருத்துவர்கள் செலின் ஜீன்காசினி, அனுகிரிடி பங்கேற்று, மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர்.
முகாமின் சிறப்பம்சமாக சர்க்கரை அளவு, சிறுநீரக பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, கருவுறுதல் ஆலோசனை உள்ளிட்ட, 2,300 ரூபாய் பெறுமானமுள்ள பரிசோதனை, வெறும், 200 ரூபாய் பதிவுக்கட்டணம் செலுத்தி இலவசமாக பெறலாம். 1,500 ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, 500 ரூபாய், 2,800 ரூபாய் மதிப்புள்ள சி.டி.,ஸ்கேன், 1,500 ரூபாய்க்கும் கட்டண சலுகையில் வழங்கப்படுகிறது.
பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளலாம். முகாமில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு, கட்டண சலுகை உண்டு.
கூடுதல் விவரங்களுக்கு, 98422 09999, 98422 11116 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.