/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் விடுதி பதிவு: 20ம் தேதி வரை அவகாசம்
/
மகளிர் விடுதி பதிவு: 20ம் தேதி வரை அவகாசம்
ADDED : மார் 07, 2025 08:16 PM
உடுமலை :
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிகள், 137 விடுதிகள் மட்டுமே பதிவு செய்துள்ளன. பள்ளி, கல்லுாரி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் பதிவு செய்து, உரிமம் பெற்ற பிறகே செயல்பட வேண்டும்.
அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் அல்லது வாடகை எனில் அதற்கான ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று, சுகாதார சான்று ஆகியவற்றுடன், http://tnswp.com என்கிற ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யவேண்டும். விடுதி நிர்வாகிகள், விடுதிகளை வரும் 20ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும்; முறையாக பதிவு செய்யாத விடுதிகளின் நிர்வாகிகள், மேலாளர்கள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்து, 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.