/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மார்ச் 1 முதல் பணி நிறுத்தம்; ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
/
மார்ச் 1 முதல் பணி நிறுத்தம்; ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
மார்ச் 1 முதல் பணி நிறுத்தம்; ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
மார்ச் 1 முதல் பணி நிறுத்தம்; ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
ADDED : பிப் 27, 2025 11:21 PM
பொங்கலுார்; பொங்கலுார் ஒன்றியத்தில், 15வது நிதி குழு மானியத் திட்டத்தில், 2024--25ல் ரோடு, குடிநீர், பாலம் உள்ளிட்ட பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு நான்கு கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை வழங்கவில்லை.
கலெக்டரிடம் மனு கொடுத்தும் பணம் கிடைக்கவில்லை. நேற்று ஒப்பந்ததாரர்கள் ஒன்றிணைந்து, பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் செய்த பணிகளுக்கு பணம் வழங்க கோரி மனு அளித்தனர்.
இது குறித்து பொங்கலுார் ஒன்றிய ஒப்பந்த தாரர் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில், ''உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பதவி முடிந்தபின் செய்த பணிகளுக்கு பணம் விடுவிக்கப்படவில்லை.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. தொடர்ந்து பணி செய்ய பணம் இல்லை. இதுவரை பணம் இல்லாமலும் பணியை நிறுத்தாமல் செய்து வருகிறோம்.
தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பணம் கிடைக்காவிட்டால் மார்ச் 1 முதல் பணிகளை நிறுத்தி விடுவோம்'' என்றார்.