ADDED : மார் 07, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அடுத்த கரைப்புதுார், ஏ.டி., காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 50, மாகாளி, 40; கூலி தொழிலாளர்கள்.
அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வரும் இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த ஒரு வாரமாக சண்டை, வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று காலை, அரிவாளுடன் வந்த மாகாளி, வீட்டில் துாங்கி கொண்டிருந்த கருப்பசாமியின் வாயில் வெட்டினார்.
சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கருப்பசாமியை, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாகாளியை கைது செய்த பல்லடம் போலீசார், விசாரிக்கின்றனர்.