/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கம்பியில் உரசி தொழிலாளி படுகாயம்
/
மின் கம்பியில் உரசி தொழிலாளி படுகாயம்
ADDED : மே 28, 2024 12:57 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்டது குமாரசாமி நகர், 3வது வீதி. அங்குள்ள சரஸ்வதி என்பவர் வீட்டின் மீது, உயரழுத்த மின்சார ஒயர் செல்கிறது.
விதிகளை மீறி, ஆபத்தான நிலையில் கம்பிகள் செல்வதால், யாரும் வீட்டுக்கு வாடகைக்கு வரவில்லை,
இந்நிலையில், ஸ்ரீநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அப்பாபி, ரஞ்சித்குமார், தனது மனைவி, குழந்தைகளுடன் குடியேறினர். தண்ணீர் கசிவு இருப்பதை பார்க்க மாடிக்கு சென்ற ரஞ்சித்குமார், உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டு, துாக்கி வீசப்பட்டார். பலத்தை காயத்துடன் மீட்கப்பட்ட அவர், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.