/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலக நாட்டிய தினம்; கோவிலில் கோலாகலம்
/
உலக நாட்டிய தினம்; கோவிலில் கோலாகலம்
ADDED : பிப் 22, 2025 07:08 AM

அவிநாசி; கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் உலக நாட்டிய தினம் கொண்டாடப்பட்டது.
கோவை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் கலைப் பண்பாட்டு துறை சார்பில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள கருணாம்பிகை கலையரங்கத்தில் உலக நாட்டிய தினம் கொண்டாடப்பட்டது.
கோவை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் வரவேற்றார். கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கவிநயா நாட்டியாலயா பரதநாட்டிய குழு, பொற்சபை அருங்கலைகளின் ஆலய பரதநாட்டிய கலைக்குழு, செந்தமிழ் கலைக்குழு மற்றும் பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா உள்ளிட்ட கலைக்குழுவினர் தங்கள் படைப்புகளை வழங்கினர்.