
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:''பத்திரப்பதிவுத்துறையின் வரைவு நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம்'' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் என, புதிய நில வழிகாட்டி மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நில வழிகாட்டி மதிப்பு, பதிவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபரம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின், 721வது எண் அறையிலும் வைக்கப்பட்டுள்ளன. நில வழிகாட்டி மதிப்பை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், ஆட்சேபனையையும் தெரிவிக்கலாம். இது பத்திரப்பதிவுத்துறையால் பரிசீலிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.