/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடியார்க்கு எளியவளே... அண்டங்கள் படைத்தவளே! அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி கோலாகலம்

ADDED : ஆக 03, 2024 06:11 AM

திருப்பூர்: ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூர் பகுதி அம்மன் கோவில்களில், பக்தர்கள் ராகிக்கூழ் படைத்து, அம்மனை வழிபட்டனர்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அனைத்து அம்மன் கோவில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, விரதம் இருந்த பக்தர்கள் ராகிக்கூழ் படைத்து அம்மனை வழிபட்டனர்.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் விசாலாட்சியம்மன், கருவம்பாளையம் மாகாளியம்மன், தென்னம்பாளையம் மாகாளியம்மன், கோட்டை மாரியம்மன், முதலிபாளையம் கொடுங்கலுார் பகவதி அம்மன், அண்ணா நகர் கருமாரியம்மன், நெசவாளர் காலனி சக்தி மாரியம்மன்; அவிநாசி ரோடு, ஸ்ரீசாரதாம்பாள் கோவில், திருப்பூர் ஓம் சக்தி கோவில், கஞ்சம்பாளையம் மகாமாரியம்மன் கோவில்களில், அபிேஷக மற்றும் அலங்கார பூஜைகள் விமரிசையாக நடந்தன. பக்தர்கள், எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றியும், ராகிக்கூழ் படைத்தும் அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு ராகிக்கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊஞ்சல் உற்சவம்
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மனுக்கும், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டாள்; கருவம்பாளையம் மாகாளியம்மன், ஸ்ரீசாரதாம்பாள் கோவில்களில், நேற்று மாலை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தியை, அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி பெண் பக்தர்கள் வழிபட்டனர்.