/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூஜ்ஜிய விபத்து திட்டம் போலீசார் விழிப்புணர்வு
/
பூஜ்ஜிய விபத்து திட்டம் போலீசார் விழிப்புணர்வு
ADDED : செப் 15, 2024 01:36 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக லட்சுமி பொறுப்பேற்ற பின் பல்வேறு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். திருப்பூர் நகரில் பெரும் பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் தவிர்க்கும் வகையில் சில நடைமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், நகரப் பகுதியில் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றினால் விபத்துகள் குறைவதோடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் நெருக்கடியும் குறைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் நகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ள இடங்களில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரதான ரோடுகளில், ெஹல்மெட் அணியாமல் செல்வது; சிக்னல்கள் மீறிச் செல்வது, போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக அதிக வேகம், கூடுதல் ஆட்கள் ஏறிச் செல்வது போன்ற விதிமீறல் வாகன ஓட்டிகள் நிறுத்தப்பட்டனர்.சிக்னல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஷாமியானா பந்தலில் அவர்களை அமர வைத்து, போக்குவரத்து போலீசார் சாலை விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், போக்குவரத்து விதிகளை முறையாகப்பின்பற்ற வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை குறித்தும் போலீசார் விளக்கினர்.